சந்தம் சிந்தும் சந்திப்பு
இதயத்தின் வாசலில்
இடைவிடாத வரவுகள்
இமைப்பொழுது நேரத்தில்
அகன்றுவிடும் நிகழ்வுகள்
சொந்தங்களின் சேர்க்கை
சோகங்களின் சேமிப்பு
சுயமுணரும் வேளையிலே
சுரக்கின்ற ஞானங்கள்
தேடுகின்ற செல்வங்கள்
ஓடுகின்ற வேகங்கள்
தேடாத வேளைகளில்
தேடிவரும் இதயங்கள்
நாடி நிற்கும் ஆதரவு
நகர்ந்துவிடும் காலங்கள்
நினைவுகளின் கொதிப்புகள்
நிகழ்த்துகின்ற வேள்விகள்
சொல்லாத சொற்களுக்குள்
புதைந்திருக்கும் அர்த்தங்கள்
சொல்லிவிடும் போதினிலே
சத்தமில்லா ஸ்வரங்கள்
பாடத பாடலுக்கு நெஞ்சில்
இசைத்திருக்கும் ராகங்கள்
வெளிச்சமில்லா விடியலில்
மலரத்துடிக்கும் தாமரைகள்
கனக்கின்ற இதயத்தில்
கவிதைகளின் கருத்தரிப்பு
தாய்மொழியில் சொல்வதினால்
தாலாட்டும் அக்கணங்கள்
சக்தி சக்திதாசன்