சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

தீயொன்று தெரிகிறது
தீவொன்று எரிகிறது
ஏனென்று புரியாமல்
ஏதேதோ நடக்கிறது

அரசியல் நாடகத்திலே
அரிசியில்லா நிலையின்று
அவலத்தின் மத்தியிலே
அல்லாடும் சோதரர்கள்

மாறாத மேடையொன்றிலே
மாறிவிட்ட பாத்திரங்கள்
மாற்றமில்லா வாழ்வுதனை
மாற்றிவைக்க யார்வருவார்?

ஐனங்களே நாயகரென்பார்
ஐனநாயக நீரோட்டத்திலே
ஐயமின்றித் தவிக்கின்றார்
ஐனங்களின்று தாய்மண்ணில்

சதுரங்கப் பலகையிலே
சதிராடும் பகடைகளாய்
சிக்கிவிட்ட மக்கள்கூட்டம்
சிறையுடைக்கும் காலமெப்போ?

உடைந்துவிட்ட உறவுகளை
உணர்ந்து நாமொன்றாயிணைந்து
உரமிடுவோம் புதியபாதையினை
உருவாக்கி நடந்திடுவோம்