சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
கனவெனும் காற்றில்
நினைவெனும் தேரில்
புனைகின்ற வரிகளில்
நனைகின்ற வேளையிது

காலமும் நேரமும்
கணிக்கின்ற நிகழ்வுகள்
கசக்கின்ற போதங்கு
கனக்கின்ற சுமைகளாய்

புலரும் பொழுதுகளில்
மலரும் எண்ணங்களுள்
சுழறும் கருத்துகளில்
மிளிரும் நிஜங்கள்

கவிழும் இருள்களைக்
களையும் விடியல்களாய்
கவியும் நிகழ்வுகளால்
கடக்கும் பொழுதுகளே !

மயக்கும் காட்சிகளாய்
மாயை நாடகத்தில்
மாறும் வேடங்களாய்
மனிதர்கள் நடிப்புகளே

தேவைகள் ஆயிரமாய்த்
தேடிடும் ஆசைகளில்
தோய்ந்திடும் மாந்தர்கள்
தோன்றிடும் உணர்வுகள்

அனுபவத் தேடலொன்றில்
ஆன்மீகப் பயணங்கள்
அனைத்தையும் புரிந்திட்டால்
அதுவன்றோ ஆன்மீகம்

சக்தி சக்திதாசன்