சந்தம் சிந்தும் கவிதை

சக்திதாசன்

ஓடுமந்த மேகம் – தனக்குள்
பாடுமந்த கீதம்
தேடுமந்த சொந்தம் ஏனோ
தேய்ந்து கலையும் மேகம்

கீறுமந்த வர்ணம் தன்னுள்
சேர்க்குமொரு கோலம்
கலையும்போதுதானெ எமக்குப்
புரியுமந்த வேஷம்

நீறுபூத்த நெருப்பாய் மனதுள்
தகிக்கும் சொந்தக் கனல்கள்
பொழியும் பாச நீரால் தானாய்
அணையும் அந்தத் தீயும்

நீயும் நானும் தேடும் வெறும்
உறவு எனும் பந்தம்
நேரும்போது தானே தெரியும்
நேசம் கேட்கும் விலையே !

வாழ்வின் உண்மை கதையின்
வரிகள் கசக்கும் போதும்
வாழ்வின் நிலையைச் சொல்லக்
கவிஞன் முயற்சி வெல்ல . . .