சந்தம் சிந்தும்
வாரம் 255
பகலவன்
இருளில் தேடுகின்றாயா
பகலை
பகலில் தேடுகின்றாயா
நிலவை
குளிரில் தேடுகின்றாயா
சுட்டை
சுட்டில் தேடுகின்றாயா
குளிரை
இருப்பதை விட்டு
இல்லாத்தை தேடுகின்றாயே
மனமே!
இல்லாத து கிடைத்துவிட்டால்
இழந்ததை தேடுகின்றாயே
ஒடும் வாழ்வில்
உந்தன் குறிக்கோள்
எதில்
வாழும் வாழ்வில்
வழிகளை தேடுவது
எதில்
காலைப் பகலவன்
போல்
களைந்து எழுவாய்
உன் கலக்கத்தில் இருந்து!
க.குமரன்
யேர்மனி