சந்தம் சிந்தும்
வாரம் 250
நான் பெற்ற இன்பம்
தரம் கொண்ட தலைப்புக்கு
மனம் கொண்ட
வார்த்தைக் கோர்வைகளால்
கவி கொண்ட
மனம் வென்று
உளம் பொங்க
புரிப்பு கண்டு
வார மொரு
செவ்வாய் மலர்ந்து
நமக்கொரு
ஆர்வம் தருமே!
கவி தொடர
கற்பனை தொடர
காவியமாக
வாழ்த்துவோமே!
சந்தம் சிந்தத்தை!!
க.குமரன்
யேர்மனி