சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 249

பொங்கலோ பொங்கல்

மௌத்தில் போகும்
பொங்கல்
நினைவதில் பொங்கல்
மனமதில் தங்கல்

கனவதில் நாளும்
மகிழ்வாகும் பொங்கல
காவு ஒன்று போய்
நாள் ஒன்று வாடி
பொங்கும் மனதில்
பொங்கிடும் வாட்டம்

வரவாகும் நாளும்
நலமாக வேண்டும்
மனமிங்கு சாந்தி
வரவாக வேண்டும

திறவாத கதவில்
திடீர் ஓசை கேட்க
தித்திப்பான பொங்கலுடன்
நின்றன்றே
அயலவர்கள் !
க.குமரன்
யேர்மனி