சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 247

சிரிப்பு
மஞ்சள் பூசி குளிக்கின்றாள்
மகரந்த பூச்சைக் தெளிக்கின்றாள்
அழகிய கூந்தலை வாருகின்றாள்
அதிலே மலரை சூட்டுகின்றாள்

வண்ண சேலை உடுத்துகின்றாள்
வகை வகையாக அணிகலன்
அணிகின்றாள்
எளிலாய் கண்மை தீட்டுகின்றாள்
ஏறிய நெற்றியில் திலகம்
வைக்கின்றாள்

நிலைக் கண்ணாடியில்
இன்னும் இன்னும் தேடுகின்றாள்
இன்னமும் குறையேன
எண்ணுகின்றாள்

தேடியும் கிடைக்கவில்லை
அவள் தொலைத்த
புன்னகையை!…

க.குமரன்
யேர்மனி