சந்தம் சிந்தம்
வாரம் 243
பிறந்த மனை
தொலைக் காட்சி
அற்ற காலமது
வீடீயோ டேப்
அறியாத பருவமது
மோகம் கொண்ட
மாயை உலகமது
ஜனரஞ்கத்திற்கு
பேர் போன
என் இல்லம்
கூக்குரலும் சத்தமும்
கொண்டாட்டமும் விசிலடியும்
கேட்கும்
தீபாவளியும் பொங்கலும்
என்றால்
இல்லம் செல்ல முடியாது!
மதிலேறிப்
பாய்ந்து கொல்லை
வழி போக வேணும்
கள்வனை போல
நடிகை நடிகர்
பதாதைகள்
அலங்கரிப்பு மேடைகள்
முன்பாக
திரை மறைவில்
என் வாசம்
அது செல்லமஹால்
திரையரங்கம்
அதன் உள்ளேயே
என் பிறந்த மனை
வாசம்!!
க.குமரன்
யேர்மனி