சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தம்
வாரம் 194

மழை நீர்

தூறும் இந்த
தூறல் அந்த
சோகம் அன்றயதை
சொல்லாதோ !

வானம் கொட்டி
தீர்த்தயன்று
வழிகள் எல்லாம்
வழிந்த வெள்ளம்

சாலை குழிகள்
நிரவி. வெள்ளம்
ஆறு போல
ஓடும் நேரம்

ஓடும் எந்தன்
துவிச் சக்கரவண்டியும்
ஒற்றைக் கை
குடையும்

இடரி அந்த
குழியில் விழ
எதிரில் வந்த
பஸ் சாரதி
ஏங்கி பிரேக்
போட்டாரே!

காலன் அன்று
காவு காத்து
மோதி விழுந்து
நெளிந்த
துவி. சக்கரத்தோடு

மழையில்
மீண்டும் வீடு
போனேனே நடந்து !!

க.குமரன்
யேர்மனி