வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 96

பேசாமல் பேசும் உலக மொழி

ஒலி இன்றிய உலகம்
எனதாகிப் போச்சு
அமைதி எனது
மனதில்
நிசப்தம் என
கொள்ளலாமே!

கண்கள் பேசும்
கவிதையை
கருத்தினில்
நாளும் உணர்வேனே !

சொல்லும் உதட்டின்
குவிதலைப் பார்த்து
குறி கொண்டு
செய்தியை அறிந்திடுவேனே!

விரல் அங்க
அபிநயமும்
எழுத்தறிவும்
விரைந்து பேசும்
செயற்திறனை
தந்திடுமே !

தடைகள் ஏதுமில்லை
தயக்கங்களை. மனதில்
களைந்தால்

பேசாமலும் பேசலாம்
பேதமையையும்
போக்கிடலாமே !!!

க.குமரன்
யேர்மனி