சந்தம் சிந்தும்
வாரம் 192
மாட்சிமை மிக்க மகாராணி
உங்களைப் போல
வாழுகின்றாள்
என்பார்கள்
உங்களைப் போல
வாழவேணும்
என்பார்கள்
உங்கள சாம்பிராச்சியத்தில்
ஆதவன் மறைவதில்லை
என்றார்களே!
வானத்து தாரகையே!
உங்கள் அழகை
இரசித்தோம் நாங்கள்
தரணியிலே!
ஒரு நூறு
வருடங்கள்
வாழ்வதுவும்
ஒரு சாதனையே!
முழுமை பெற்ற
வாழ்வில்
முழு சாந்தி பெறுவீர்களே!
மாட்சிமை மிக்க மகாராணியே !
க.குமரன்
யேர்மனி