சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 191

எண்ணம்
விழாவுக்கு வா
விழாவுக்கு வரமாட்டேன்!
எல்லோரும் என்னை
பார்ப்பார்கள்
எல்லோரும் உன்னை
பார்த்தால்
எல்லோரும் என்னை
கேட்பார்கள்
இன்னுமா திருமணம்
ஆகவில்லை
இன்னும் திருமணம்
ஆகவிட்டால் என்ன?
ஒப்பீடும் செய்யலாம்
ஒரு நக்கலும் அடிக்கலாம்
ஒப்பீடோ நக்கலோ
உன்னை ஒன்றும் செய்யாது!
வாய் வழி பேச்சு
மன வழியாக போச்சு
மனம் சினமாகி
மன வலி சேருமே!
நிழல் ஒன்றை
நிஜமாக்க
எண்ணம் ஒன்றே
வடம் போட்டு
தடை போடுதே!!

க.குமரன்
யேர்மனி