சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 180

பிரிவுத் துயர்

குரல் ஒன்று
கேட்பது யில்லை இன்று
மடை திறந்த வெள்ளமென
ஓடிய குரல் ஒன்று
மௌனமாதே இன்று !

தடை ஒன்று வந்து
தடம் மாறி அன்று
விடமுண்ட கண்டன்
விடையோன்று கண்டான்!

அலை வானில்
அலைகின்ற குரலை
முழு வானம் தன்னில்
முழுமையேனக் கொண்டான்!

பதிவான குரலைப்
பதிந்து நாமும் கேட்டு
தொடரும் மதி தனிலே
அழியாச் சுடர்யேன வைப்போம் !

க.குமரன்
யேர்மனி