சந்தம் சிந்தும்
வாரம் 234
தலைப்பூ
மனம் பதைக்க
நெற்றியில் கை வைத்து
கொதிக்கும் சூட்டைப்
பார்த்து
குழந்தையின் வயிற்றுப்
போக்கும் காச்சலும்
கூடுவதற்கு முன்
ஆஸ்பத்திரிக்கு போங்கள்
என்றவளுக்கு
கணவனின் தயக்கம்
புரிய
காதுக் கம்மலை
கையில் கொடுத்து
வழியில் அடைவு
வையுங்கள்
ஆட்டோவில் செல்லும்
அவர்களை வெறித்தவள்
என் குழந்தை
சுகப் பட
குலதெய்வ அம்மன்!!
உனக்கு பொங்கல
வைப்பே யேன
முந்தானைப் தலைப்பில்
ஒரு ரூபா
குத்தியை வைத்து
முடிச்சு போட்டாள்
பார்வதி!
க.குமரன்
யேர்மனி