சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 25.4.23

ஆற்றல்

துஞ்சும் அந்த கண்கள்
தூங்காது இருக்க
விஞ்சுகின்ற எண்ணங்கள்
விரைந்து ஓட

கண்ட அந்த கனவு
காணலற்ற நனவாக
மாறவைக்க மனமும்
முந்தி
கடின பயிச்சி
காட்டும் வேகம்

உடலும் மனமும்
உறுதி கொண்டு
ஊனம் என்ற
தடையை வென்று

காணும் அந்த வெற்றி
காட்டாதா உந்தன்
ஆற்றலை ?

க.குமரன்
யேர்மனி