சந்தம் சிந்தும்
வாரம் 231
அரச மரம்
நிழல் தரும்
அரச மரம்
நீதி தருமா
சொல் மனமே!
கதை சொல்லும்
வரலாற்றில்
பரிநிர்வாணம்
புத்தருக்கு
உனது அண்டை
தந்ததாலே!
பரந்த ஈழத்தில்
பார்க்கும்
இடமெல்லாம்
பௌத்த புத்தர்
சிலை வைத்து
உன் பாதம்
வைத்த இடமென்று
விகாரைகள்
உருவாகும்
விகார மனங்களை
காண்கின்றோம்
அகிம்சை அற்ற
ஆன்மீகம்
அதிருப்தி தரும்
தார்மீகம்
மண் காக்க
அரச மரத்தை
சாய்த்திடுவோமா
சொல். மனமே!
க.குமரன்
யேர்மனி