சந்தம் சிந்தும்
வாரம் 295
விருப்ப தலைப்பு
கும்பமேளா
தீர்க்க வந்த பாவம்
போகும் எங்கே போகும்
பாவம் தேடும் கூட்டம்
பரம் பொருளை எங்கே நாடும்!
மாலை விற்கும் கூட்டம்
பண வரவை அங்கே தேடும்
காளை அவன் கண்கள்
கரு நாகமாக பெண்ணைத் தேடி
போட்ட வர்ண போட்டோ
மீடியா புகழைக் காட்டி
அழகி அவள் என
அருகில் நின்று போட்டோ
ஆளுக்கு ஒருவன் மீடியாவில் போட
அவளுக்கு தொல்லை கூட
மீள முடியாது
மீண்டு ஊர் போறாளே !
வேலை இந்த வேலை
வேண்டுமா ?
மீடியாவில் போட்டு
க.குமரன்