சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 282

பெருச்சாளி

வீதியிலே நின்னு
பெரிய கார் போகுது
என்று நின்னு
காரிலே இருந்தவரு
கை காட்டி போகயிலே
மந்திரி போறாரு
என்று கூறி
மகிமை பாராட்டினோம் ஐயா !

ஆட்சி மாறின போது
ஊர் மக்கள்
பணத்திலே ஒட்டுண்ணியாக
உறிஞ்சின பெருச்சாளி
அறியும் போது
வருது ஐயா !
கோபம் நமக்கும் கூட ..

க.குமரன்