சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 279

விடியுமா தேசம்

விடியுமா தேசம்
கேள்விகளை மீண்டும்
கேட்டுக் கொள்வோம் !
மாற்றங்களை ஏற்காத மக்கள்
வேற்றுமைகளை மனதில் வைத்து
வேடங்களை போட்டு வாழும்
நடிகர்களான எமக்கு
உண்மையான ஆட்சி
நேர்மையான செங்கோல்
இனி வருமா ?
சுய நலங்கள் வாழ
பொது நலங்கள் போக
விதி முறைகள் மீற
நெறி முறை தான் வருமா?

மனித நேய மற்று
போர் மூழும் நேரம்
மறை முகமாக ஊதும்
மற்றைய நாட்டை பார்க்க
இதுவும் ஒரு புழைப்பாயேன
ஏங்க மனம் தோன்றும் போது
விடியுமா நம் தேசம் ? ….

க.குமரன்