சத்தம் சிந்தும்
வாரம் 278
தேர்தல்
வாக்கு கொடுத்து
வாக்கு வாங்க
வந்தேன் ஐயா!
நேற்றைய நிலமை
இனி இல்லை!
நாளைய நாள்
நம் கையில்
விலைகளை குறைத்து
வறுமையை போக்குவோம்
தொழிகளை கூட்டி
பொருளாதாரத்தை உயர்த்துவோம் !
இலவசமும் மானியமும்
தந்து இன்னலை போக்குவோம்
மறவாமல் நம்
சின்னத்திற்கு
பொன்னா வாக்கை
அளியுங்கள்
க.குமரன்