சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 276

பருவம்

மண்ணில் கால் பதிக்க
நுகரும் மூக்கு
பருவம் இதுவாயேன
கேட் க்கும நாக்கு

பல இரகமானாலும்
பழுத்தால் ஒரு சுவை
ஒழித்து வைத்து
உண்போரும் உண்டு

தோலோடா?
விதையோடா?
எனக் கேட்டு
வெட்டி உண்போருமுண்டு

விட்டால் கிளிக்கு
பறித்தால் எமக்கு
இந்த மாம் பழங்கள்

க.குமரன்