சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 275

ஓலம்

என் உயிருக்குள்
ஒர் உயிராக
ஐந்து திங்கள்
வளர்ந்த என்
சுடரே …. வளர்மதியே !

உன் வளர்ச்சி
குன்றியது ஏனோ
உன்னை அஸ்தமிக்க
செய்தார்கள்!
ஐயோ!!….

வளர் தளிரில்
வந்த கனவுகள்
நினைவில் வாட்டுதே

சுடும் இரவுகள்
மலர் விழியினை
குளமாக்க
அலர விழி மறுக்குதே

கணம் என்னைப் புரிய
காலன் ஏன் மறந்தானோ?

வளர் பொழுது களில்
முழு மதியேன
கால அறுவடை பெற
காத்திருப்பேன் மீண்டும்
உனக்காக ……என்றும்

அம்மா

குமரன்