சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சத்தம் சிந்தும்

வாரம் 269

வசந்தம்

வசந்தத்தை
தேடுகின்றேன்
வாரி இறைத்து
வெள்ளத்தில்
மூழ்கிப் போன
இல்லத்தை
மீட்டு வைக்க
யாரால் கூடும்

ஆற்றின் அழகில்
மயங்கி
அருகில் வீடு
கட்டி
நாளும் ஒடும்
நீரின்
சலசலப்பில்
நாமும் எம்மை
மறந்தோம்

வானம் கிழித்துக்
கொட்டி
வராத. கோபமும்
வந்து
மேவி நிற்கின்றாய்
என் வீட்டை

கோபம் தனியுமா?
கொய்த என்
உடமைகளை
மீட்க வழி
கேட்டு
மீண்டும் தேடுகின்றேன்
வசந்தத்தை!…….

க.குமரன்