சந்தம் சிந்தும்
வாரம் _263
அழகு
யாழினி உதட்டுக்கு
சாயம் போட்டு
கண்ணாடியில் பார்க்கின்றாள்
ஊதா கலந்த
வர்ணம் இயல்பு
அழகை காட்ட
மீண்டும் மீண்டும்
பார்க்கிறாள்
நான் கூட அழகாக
அவள் தேவைகளில்
இது ஆடம்பரம்
தேவை அற்ற
செலவு
பரிசாக கிடைத்தால்
பூசி பார்த்தாள்
மௌன மொழி
பேசும் அவளை பார்த்து
ஒருவன் மூன்று
விரல்களை
காட்டி அழகு என்றான்
நாணம் வந்தது
அவளுக்கு
அந்த உணர்வும்
அழகை தந்தது
க.குமரன்