சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தத்தில் ஓர்நாள்
காரிருள் ஓட கலகலப்பை நாட
பேரிருள் கலைந்து பகலவன் வரவும்
தேரிழுக்க மாந்தர் தினமும் நாளெண்ண
வாரிச் சுருட்டி விரைவாய்ப் பனிகலைய
வசந்தமே வந்திடு வெளிச்சத்தைத் தந்திடு
கசப்பாய் இருக்குது காரிருள் மூட்டம்
உசுப்புது உடலை உபாதைகள் பெருகி
பசுமையைத் தேடுது பகலவனை நாடுது
பாடுபட்டு பறவையினக் கூட்டம்
கூடு கட்டக் குச்சிகள் தேடுது
வசந்தத்தில் ஓர்நாள் வந்திடு விரைவா
பசங்களும் தேட பல்லினமும் தேடுது…
கோசலா ஞானம்.