சந்தம் சிந்தும் சந்திப்பு
பொறுமையின் பெருமை
எத்தனை பழமொழி ஏட்டிலே உள்ளது
அத்தனை யுமேகாண் அருமை அருமை
பொறுமைக்கு ஓர்பழமொழி பொறுத்தார் பூமியாழ்வார்
பொறுமை இழக்க பெருந்துயர் நெருங்க
வறுமை வந்து வாட்டிடும் வாழ்வை
பொறுமை இழக்க பெருக்கும் சினமும்
ஆறுவது சினம் கூறுவது தமிழ்
என்றார் ஒளவையார் அப்பன் முருகனுக்கு
ஆறுமுக்க் கடவுளரே அதில் விடுபட்டாரா?
பொறுமை பொறுமை பொக்கிஷம் மாந்தரே!
புரிதலின் பெருமையைப் பெரிதாய் எண்ணி
விரிசல் விட்டு விலகப் புவியில்
பொறுமையாய்ப் பூமியை ஆள்வோம்
புன்னகை வாழ்வில் பூத்திட வாழ்வோமே..