சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ மார்கழி “

மார்கழித் திங்கள் மகத்தான நன்னாள்
பூர்வீக மாக்கள் புனைவர் பாக்கள்
சோர்வின்றி விரதம் சோராது பிடித்தார்
சுறுசுறுப்பு உற்சாகம் சோம்பலைத் தவிர்த்திடும்

அதிகாலை திருவெம்பா அற்புதமாய்ப் பாடுவர்
அப்பன் சிவனிடம் அருள்வேண்டி வணங்கி
பதிகங்கள் தினம்தினம் பாடி மகிழ்வர்
பிள்ளையார் பெருங்கதை பாவைப் பாட்டெனவும்

இல்லங்கள் தோறும் எங்கும் மின்விளக்கு
இயேசுவின் ந்த்தார் இனித்திடக் கொண்டாடி
மங்காமல் வாழ்வு மலர வேண்டியே
மேன்மைகொள் தரிசனம் மேதினி எங்கும்…

கோசலா ஞானம்.