சந்தம் சிந்தும் சந்திப்பு
நேரம்
——-
நேரம் காலம் பார்த்து செய்த
நல்ல காரியம் இடையில் நடந்ததென்ன
ஒன்றுமே பாராது செய்யும் செயல்கள்
நன்றாக இருக்குமே நேரடி காண்கையில்
நேரமின்றி ஓடிஓடி உழைத்திடும் மனிதர்
நோய் வந்த பின் ஓய்ந்து விடுவார்
சுரமின்றி வாழும் வாழ்க்கை அவர்க்கோ
சுற்றத்தினை இனம் காட்டும் வேளை
யாரைக்கேட்டாலும் நேரமில்லை நேரமில்லை
எங்கே போனது இந்த நேரம்
நேரம் என்பது எமது கையில்
நல்லபடி பயன் படுத்த வேண்டும்
நேரம் பொன்னானது
நேரத்தை மதித்து
நாமும் வாழுவோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
23.4.24