சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்கு நீ
———-
என்வாழ்வின் பங்கு நீ
இடையில் விட்டுப் போனதென்ன
இருண்ட உலகில் வாழ்வது போல
மருண்டு விட்டேன் உனது பிரிவால்
பங்கு போட்டோம் எனது உனது என்று
இங்கு என்பங்கு இருக்கிறது
உம்பங்கையும் எனக்காய் விட்டுச் சென்றீரோ
இப்பூமியில் பிறந்து விட்டோம்
பூலோக வாழ்வில் அமிழ்ந்து விட்டோம்
பூமியின் பங்கு நீ அறிவாயா
நம்பங்குதான் நாம் அறிவோமா
பங்குச்சந்தையில் பணம் வாரிவழங்கி
பொங்கும் மகிழ்வுடன் முதலாய்க் குவித்து
தங்கிய இந்த குபேரவாழ்க்கை
எங்கும் எதிலும் மகிழ்ச்சி
அதன் பங்கு நீ தான்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
19.2.24