பழமை
பழமை தந்த பசுமை நினைவு
புதுமையில் ஒன்றும் பெரிதல்லவே
பழமை பழமை என்று வெறுப்போர்க்கு
பழமையின் சுவை புரிவதில்லையே.
பழைய சோறு கஞ்சி குடிப்பது
பதப் படுத்தும் உடலையென ஆய்வு.
ஆய்வுகள் தேடும் பழமைதானே
அறிவியலில் மிஞ்சி நிற்கிறதே.
எம்முன்னோரது பழமை கண்ட அறிவியல்
இப்புதியவரை ஆளுமைப் படுத்துகிறதே.
எண்ணிப்பார்த்தால் ஆச்சரியம் ஆனால் உண்மை.
இப் பூமிப் பந்தில் உதித்திடும் உண்மை.
பழமை என எதையும் ஒதுக்காமல்
மதித்துப் போற்றல் பொக்கிஷமாகும்.
பழமை தான் என்றும் புதுமையாகும்
இளமையும் ஒரு நாள் பழசாகும்.
கெங்கா ஸ்டான்லி