வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

உழைப்பாழர்

வயலும் வயல் சார்ந்த நிலமும்
மருதம் மக்களின் மகிழல்.
வயல் விதைத்தால் தான்
வயிறு நிறையும்.
வயிறு நிறைந்தால் தான்
மனதும் மகிழும்.
உடலும் ஆரோக்கியமாகும்.
இவ்வளவும் நடக்க
உழைப்பாளி தேவை.
யாரவர் எனில் விவசாயி.
சங்க கால இலக்கியங்கள்
உழவன் பற்றி உன்னதமாக சொல்லின.
இன்று அவர் நிலை கேள்விக் குறியாகின.
உலக நாடுகள் உழைப்பாளர்
தினம் கொண்டாட,
உழைப்பின்றி வாடும் மனிதர்
தான் மனம் சோர்ந்திட,
உழைக்கும் தொழிலாளர்
அடிமைத் தனமே.
உரிமைகள் கோரிடும்
வெறித் தனமே.
கால நேரம் பாராத
கடின உழைப்பாளி.
உடல் வலிமை யின்றி
உமையாக நீங்கள்
முறையான கூலிபெற்றிடா
முழுநாளும் மாடாய் உழைக்கும்
ஏழைத் தொழிலாளியின் பைவெறுமை
முதலாலி உடல் அசைக்காமல் பைமுழுமை.
கஷ்டமான வேலைகள்
தான் செய்யும் தொழிலாளி.
கண்ணீர் தான் கடைசியில்.
கவலையினால் துவண்டுவிடும்.
உழைப்பாளிகளை
மதியுங்கள்.
உழைப்புக் கேற்ற
ஊதியம் கொடுங்கள்
அவர் மனம் குளிர
வையுங்கள்
உங்கள் வாழ்வில்
மனித நேயம்
பேணுங்கள்.

கெங்கா ஸ்டான்லி.