சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

வாழ்வு சிறக்கும்

பிறக்கும் போதே
இறப்பும் எழுதப்படும்.
இது இயற்கை விதி.
இறந்தவர் மீண்டும்
எழுவதில்லை.
இதுவும் இயற்கையின் நியதி.
வாழும் போது வாய்மை
தவறாது வாழவேண்டும்.
மீளும் நினைவுகள்
மென்மையுடன் காணவேண்டும்.
மனதிலே வஞ்சினம் வேண்டாம்.
செயவது நல்ல காரியம்,
செயல்பட நல் ஏண்ணம்.
நன்றியுள்ள நாய் கூட
வாலை ஆட்டும் நன்றியுடன்.
நன்றி மறந்தோர் செயல்
மனதை வருத்தும்.
நீயும் நன்றியுள்ள
மனிதனாக வாழக் கற்றுக்கொள்.
வாழ்வும் சிறக்கும்
உனது வாழ்வும் சிறக்கும்.

கெங்கா ஸ்ரான்லி