அனுபவித்து தான் ஆகவேண்டும்
காலம் கனித்தால் எல்லாம் நலமாகும்.
கோலம் மாறினால் எல்லாமே வீணாகும்.
பாலம் உடைந்தால் வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஞாலம் சீறினால் நாடே அழியும்.
தோற்றம் கண்டு மனிதரை கணிக்காதீர்.
மாற்றம் தரும் அவர் செய்கை காணீர்.
காற்றும் வேகமாக வீசுதல் புயலாகும்.
தேற்றும் இறையருள் ஏழைகள் வாழ்வையே.
இயற்கையின் கோபம் எழிலையே அழிக்கையில்
செயற்கை குண்டுகள் குடிக்கிறது மக்களுயிரை.
மாயை பெருகி மக்களை வாட்டுகிறது
வாய்மை வென்று வளமிகுவது எப்போது.
வைரஸ் வந்து வாட்டியது மக்களை.
சூறாவளி வந்ததால் சூறையாடியது நாடுகளை.
ஏடுகளை எடுத்துப் பார்த்தால் ஏதோ சொல்கிறது.
பாடுகளைப் பட்டே அனுபவித்துதான் ஆகவேண்டும்
இதுவே மனிதனுக்கு எழுதப்பட்ட விதியா ?
கெங்கா ஸ்ரான்லி