வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
—————
விதைக்கப் பட்ட விதை
முறைவிட்டு விருட்சமாய்
புதைக்கப்பட்ட உண்மைகள்
புதிய இடம் நோக்கலாய்
வதைபட்ட இனம் வளர்ச்சி பெற்று
திடப்படுத்தும் கனலாய்
பொங்கு தமிழில் இங்கு மிஞ்சிடும் மழலை
தங்குமவரிடம் தாயின் கருணை
விஞ்சிடும் மழலைத் தமிழ்
கொஞ்சிடும் அவர் பேச்சில்
எஞ்சிய நிலையில் எடுத்துரைக்கும்
அவர் தமிழே இவ்வுலகில்
அடுத்த தலைமுறை உருவாக்கும்
அமிழ்தினும் இனிய தமிழை
ஆர்வமுடன் கற்றுத் தரும்
அரிய பணியாய் நீவீரும்
தொடர்பணியாய்
தன்னலமற்ற சேவையாய் தமிழுக்கே
எளிதாக கற்றிடவே எங்கும்
எழுத்தாக விதைப்போமே
நாளும் ஒரு சொல்லை
நயமுடன் சொல்லி வந்தால்
கேட்பார் அவர் அனுதினமும் ஆவலோடே
எழுத்தின் வித்துதான் நாளை
பூத்தெழும் தமிழே பெரும் மலர்வனமாகவே
கால்்நூற்றாண்டு அகவை நிறைவு
காலத்தால் படைத்த தமிழ்வலை
பாமுகமாக விரிந்து பரந்து
ஏர்முகமாக மேலோச்சி நிற்கிறது
இளையோர் முதல் மூத்தோர். வரை
இணைத்து வளரும் வானொலி பாமுகம்
இன்னும் வளர இமயம் போல
இனிதே வாழ்க இன்மொழி தமிழே வாழி