வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

இயற்கை நியதி
—————-
இன்றைய உலகிது
இயற்கையின் சுழற்சியே
இயலுமோ இயற்கையை
வென்றிட மனிதனால்்
சகலமும் சப்தஸ்வரம்
சாதனையாகும் சரித்திரம்
மக்களும் மயங்கிடும்
மந்த செயலிலே
சொக்கியே நிற்கிறார்
சொந்தமாய் பணத்திலே
கற்களும் அழகிய
சிற்பமாய் தெரிகையில்
முற்றத்து செடிகளும்
முன்னோக்கி வளருமே
எதுகை மோனை மனிதருக்கா
எஞ்சிடும் எண்ணம்
பந்தத்திற்கா
ஏற்றமும் தாழ்வும்
இயற்கையின் நியதி
இதிலென்ன கனதி
இப்புவி மாந்தருக்கு
மதியுடன் செயற்பட்டால்
மாற்றுமா அனைத்தும்
விதிவந்தால் மதியும்
மறைக்கும்
கண்ணையும் மறைக்குமாம்
இதுவும் இயற்கை நியதி மானே