சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
——-
மாசிப் பனி மூசிப்பெய்யும் என்பர்
மாசிப் பனி குளிரால் உறைகிறது
உடம்பு வெடவெடக்கிறது
பல்லு கிடுகிடுக்கிறது
மேகமூட்டம் இருளாய் உள்ளது
பாதையும் தெரியவில்லை
பயணமும் கஷ்டத்திலை
குளிர் ஒரு பக்கம் இருட்டொரு பக்கம்
காலைவேளை மகிழ்ச்சி யில்லை
கதிரவன் வந்தால் களிகூரும் மனம்
இல்லையெனில் மந்தமாக இருக்கும்
இது இயற்கையின் நியதி
இன்னும் கொஞ்ச நாள்
இவை கடந்திடும்
இளவேனில் வரும்
இதயமும் சிலிர்க்கும்
துன்பமும் கரையும்
பனி கரைவது போல
மாசிப் பனியே மறைந்து விடு
காணும் உன் வருகை!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி