சந்தம் சிந்தும் சந்திப்பு
பூக்கும் புத்தாண்டு
———————
பூக்கள் பூத்தது
புதுப் பொலிவுடன்
புத்தாண்டு பிறந்தது
தனிமெருகுடன்
மக்கள் மனதில்
நம்பிக்கை நலம்பெற
மலர்ந்து விரிந்த
புத்தாண்டு சுகம்பெற
கடமை கண்ணியம்
கட்டுப் பாடு பேணி
காக்கும் இந்தப்
பூமியில் ஏதுஅணி
பட்டாசு கொழுத்தி
புத்தாண்டை வரவேற்று
சிட்டுக்கள் தொடக்கம
பெரியோர் வரை. பதிவேற்று
கலகலப்பான புத்தாண்டு
வந்தது வந்தது
கவலைகள் பறந்து
சென்றது சென்றது
புள்ளினங்கள் முதல்
பூதலத்துள்ளோர் வரை
அள்ளி எடுக்க ஆனந்தத்தை
ஆவலுடன் சென்றனர்
ஆணவம் கரைந்தது
அழகும் மிளிர்ந்தது
அத்தனை மனமும்
குளிர்ந்தது மகிழ்ந்தது
பூக்கும் புத்தாண்டில்
புன்னகையோடு
பார்க்கும் மனிதரெல்லாம்
பரவசமாக இருக்கட்டுமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி