சந்தம் சிந்தும் சந்திப்பு
உயர்க்கொடை
————-
விலைமதிப்பில்லாத இந்த உயிர்
விடியலுக்காக ஈந்த உயிர்
ஈகைச்சுடராக எரிகிறதே
ஈன்றவர் நெஞ்சம் கொதிக்கிறதே
நாட்டு நலனுக்காக நல்லுயிர் கொடுத்து
காடுமேடு பள்ளம் தாண்டி
காவலர்களாய் காத்தாரே எம்மக்களை
வேட்டு வைத்து உயிரை
ராணுவம் பறித்ததே
எத்தனை உயிர்கள் எத்தனை இடர்கள்
பட்டினி இருந்து பரிதவித்த போதும்
ஏட்டினில் எழுதிய எண்ணற்ற நினைவுகள்
பாட்டினில் பாடி இன்று என்ன பயன்
உயிர்கொடை கொடுத்த
வள்ளல் எங்கே
உயிர்காக்க தம்முயிர் ஈந்த மாவீர்ர்
எங்கே
முத்தான உயிரை சொத்தாக எம்
தாய்மண்ணுக்காய் ஈந்த
கொடைவள்ளல்களே
காந்தள் பூக்களால்
அர்ச்சனை செய்து
அஞ்சலி செய்கிறோம்
உமது ஈகைக்காய்
மாவீர மணிகளே!
கெங்கா ஸ்ரான்லி