சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசும் மனிதர்
—————-
இவர்கள் பார்வையில் நல்லவர்
பேச்சில் விண்ணர் என்று
பாவிமனம் நினைக்கையிலே
பாழாய்போன மனம் மறுதலிக்க
முன்னால் பேசும் பேச்சை நம்பி
உள்ளம் வெள்ளை என எண்ணி
உள்ளம் நெகிழ இருப்பார்
பின்னால் அவர் கூறும் அவதூறுகள்
அறியாதவராய்
அறிந்ததும் அதிர்ந்து விட்டார்
இப்படியும் மனிதர்களா
உதவ செய்வது போல செய்து
நடித்து
உபசாரம் பல செய்து ஏமாற்றி
கள்ளமனம் கொண்டு
கண்டபடி கதைகள் சொல்லி
கேவலப் படுத்தும் மனிதர்களை
என் சொல்ல
ஏன் மனிதா இப்படி நடந்து
மற்றவர் மனதை புண்படச் செய்கிறாய்
இப்படி செய்துவிட்டு மகிழாதே
உனக்கும் இந்நிலை ஒருநாள் வரும்
பிரபஞ்சம் உன்னையும் விட்டுவைக்காது
உன் உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் குணத்திற்கு
கிடைக்குமே ஒருநாள்
பிரதிபலன் அன்று தெளியும்
உன் மனம்.
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
4.8.24