சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

பள்ளிப்பருவம்
————-
பள்ளிப் பருவம் எமது
கிள்ளைப் பருவம் அது
துள்ளித் திரிந்த காலை
அள்ளிப் பருகும் சோலை
பயமறியாப் பருவத்தில் நாம்
எத்தனை எத்தனை குழப்படி
கடகடவெனப் பேசி
சுடச்சுட பதில் கூறி
விடுவிடுவென நடந்தோம்
சடுகுடு விளையாடியும் மகிழ்ந்தோம்
ஒரு ரூபாவுற்கு ஐஸ் பழம் வாங்க
ஒட்டறை தட்டி பெற்ற நிலை
அதை உறிஞ்சு குடிக்கையில்
அப்படி ஒரு பேரின்பம்
குறும்புகள் செய்யயும் பருவம்
குமுகத்தில் பேச்சும் கிடைக்கும்
பொருட் படுத்தாது புகுந்து விளையாடுவோம்
கல்வி கற்று தேர்ச்சி. பெற்றோம்
கடவுளை வணங்கி ஆசி பெற்றோம்
பெற்றார் சொல் கேட்ட
பிள்ளைகள் நாம்
இன்று நினைத்தால் திரும்பி வராதா
பள்ளிப் பருவம் என்று ஏங்கியபடி!
கெங்கா ஸ்ரான்லி
நன்றியுடன்