விடுமுறை
விடுமுறை முடிந்தது
வீடு திரும்பியது.
பாடசாலை திறந்தது,
பழையபடி வேலையும் ஆரம்பம்.
இப்படியே ஓடும் வாழ்க்கை.
வசந்தம் கொண்டு
வந்த விடுமுறை
அடுத்த ஆண்டு வரை
காத்திருக்கும் ஆனவரை.
விடுமுறையில் களித்த
மகிழ்வான தருணமதை நினைத்து,
அடுத்த கோடைக்கான
எதிர்பார்ப்பு.
கோடைவிடுமுறை
குதூகலமானது.
வாடை வரும்வரை.
வசந்தம் தருவது.
வெய்யில் நிறைந்த காலம்,
வெண் மணலைத் தேடும் நேரம்.
கண்கள் பசுமை காட்சிகாணும்.
விரும்பிய இடமெல்லாம் சுற்றலாம்
விருந்தினர் பலரும் வரலாம்..
கோவில் திருவிழாக்கள் கும்மாளம்
கொண்டாட்டங்கள் கூடியதில்.
மக்கள் மனதில் மகிழ்வோட்டம்
மகிழ்ந்து கொண்டாடும் நெகிழ்ச்சி.
நாடுபல சுற்றிய நயமது வியந்து
கூடுகள் சென்று கூடிய நேரம்.
கூட்டமும் நாட்டமும்
கலைந்தது போகம்.
போகத்தில் மிதந்தோம் நாம்
வியூகம் சரியாக அமைந்ததால்.
அடுத்த தலைமுறையை
அனுசரித்தோம் நாம்
விடுமுறையும் வரட்டும்
என்று காத்திருந்த படி.
கெங்கா ஸ்டான்லி