சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

மாற்றம் !

தோற்றம் பெற்ற உயிர்கள்
ஏற்றம் பெற்று உயர்ந்திட
வாட்டம் கொண்டு உழைத்து
நாட்டமாய்ப் பெற்றது மாற்றமொன்றே!
திருப்தி கொள்ளாத் தேடலில் ஞாலம்
தினமொரு உருவாய் திகழ்ந்திடும் கோலம்
கணமொரு பதிப்பாய் காட்சிகள் ஜாலம்
மனதினை மயக்குது மாயமான் தூலம் !

கணினி யுகமாய் கடுகதி விரைவு
காற்றும் காரும் காலத்தின் பதிவு
மாற்றும் வித்தையில் மனித உணர்வு
வேற்றுக் கிரகமாய் விஞ்ஞான உலகு!
பாச அணைப்பு வேசமென்று ஆக்கி
பாட்டனும் பாட்டியும் சுமையென ஒதுக்கி
தோட்டந் துரவில் கட்டிடம் நிறைத்து
தேடிய விதைப்பாய் ஓசோன் அழிப்பு!

காலச் சுழற்சியில் கரையும் கணத்தில்
நாளைய உலகிலும் நவயுகத் தோற்றம்
நாமதை உணர்ந்தால் ஏற்றுடும் சூழல்
இல்லையே தள்ளிடும் பழசாய் ஒதுக்கி!
நகர்திடும் மாற்றம் என்றும் மாறதது!

கீத்தா பரமானந்தன்