சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

பருவம்!
படைப்பின். விளையாட்டில்
பருவங்கள் பலவாய்!
தடையின்றி நகர்த்தும்
தடக்கியும் வீழ்த்திடக்
களிப்பினை நிறைப்பதும்
கணமெலாம் இனிப்பதும்
பச்சிளம் பருவம்!

கள்ளமேஇன்றிக்
கமழ்வுடன் மிளிரும்!
மல்லிக்கைப் புவாய்
மலர்ந்துமே சிரிக்கும்
சொல்லினில் அடங்காச்
சுந்தரப் பருவம்!

எண்ணிய முடித்து
ஏற்றத்தை நிறைத்து
மண்ணையும் கயிறாய்
மாற்றிடத் துடித்து
வண்ணமாம் உலகிற்கு
வழிகாட்டி நிற்கும்!
வாலிபப் பருவம்!

பருவத்தின் வாசல்
பயிற்றய பாடத்தில்
முற்றிய ஞானியாய்
மூப்பெனும் பருவம்!
சத்தமேயின்றி மூலையில்
சாய்க்கின்ற பருவம்!

கீத்தா பரமானந்தன்
02-09-24