சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

பெண்மையைப் போற்றுவோம்!

அன்பின் உருவாய் அகிலம் வாழ
அணைத்துக் காக்கும் பிறவியிவள்!
இன்பம் ஒன்றே இலக்காய்க் கொள்வாள்
ஈடே காணா மேன்மையவள்!
தன்னை யுருக்கித் தருவாள் ஒளியை
தண்மை நிலவாய்ப் பூமியிலே!
இன்னல் ஒன்றே இவளின் பாதை
இரக்கம் இல்லா மூடரிடை!

கனவைப் புதைத்தே களிப்பை விதைக்கும்
கணமும் ஓயாக் கடிகாரம்!
அனலில் நின்றும் அமுதைப் பொழியும்
ஆற்றல் நிறைந்த புதுமையிவள்!
தனமாய்க் காண்பாள் தாங்கும் குடும்பம்
தங்கம் இவளுக் கீடில்லை!
மனத்தில் மலராய் மருவா நிறைவாய்
மனிதம் படைக்கும் தூய்மையவள்!

முடியா வலையாய் முறுவல் பறிக்கும்
மூர்க்கம் இன்னும் பூமியிலே!
படிப்பின் உயர்வும் பறித்தே யடக்கிப்
பதற வைக்கும் மனிதரிங்கே!
வடிகால் இன்றே வாடல் காணல்
வனிதை வாழ்வில் நித்தியமாய்!
இடியாய்த் தாக்கும் இடரிடையும்
இனிமை உருவாய் உலவுகின்றாள்!
எத்தனை சொல்லினும் இவளுக்கீடில்லை
வாஞ்சையாய்ப் போற்றுவோம் பெண்மையை!

கீத்தா பரமானந்தன்
18-03-24

பெண்மையைப் போற்றுவோம்!

அன்பின் உருவாய் அகிலம் வாழ
அணைத்துக் காக்கும் பிறவியிவள்!
இன்பம் ஒன்றே இலக்காய்க் கொள்வாள்
ஈடே காணா மேன்மையவள்!
தன்னை யுருக்கித் தருவாள் ஒளியை
தண்மை நிலவாய்ப் பூமியிலே!
இன்னல் ஒன்றே இவளின் பாதை
இரக்கம் இல்லா மூடரிடை!

கனவைப் புதைத்தே களிப்பை விதைக்கும்
கணமும் ஓயாக் கடிகாரம்!
அனலில் நின்றும் அமுதைப் பொழியும்
ஆற்றல் நிறைந்த புதுமையிவள்!
தனமாய்க் காண்பாள் தாங்கும் குடும்பம்
தங்கம் இவளுக் கீடில்லை!
மனத்தில் மலராய் மருவா நிறைவாய்
மனிதம் படைக்கும் தூய்மையவள்!

முடியா வலையாய் முறுவல் பறிக்கும்
மூர்க்கம் இன்னும் பூமியிலே!
படிப்பின் உயர்வும் பறித்தே யடக்கிப்
பதற வைக்கும் மனிதரிங்கே!
வடிகால் இன்றே வாடல் காணல்
வனிதை வாழ்வில் நித்தியமாய்!
இடியாய்த் தாக்கும் இடரிடையும்
இனிமை உருவாய் உலவுகின்றாள்!
எத்தனை சொல்லினும் இவளுக்கீடில்லை
வாஞ்சையாய்ப் போற்றுவோம் பெண்மையை!

கீத்தா பரமானந்தன்
18-03-24