சந்தம் சிந்தும்சந்திப்பு!
மாசி!
பூமிமகள் ஆடையெனப்
பூம்பனியும் பெய்திருக்கச்
சோம்பலுடன் உடலதுவும்
போர்வையினைத் துணைக்கழைக்க
ஆம்பல் அல்லிக் குளங்களுமே
அழகொளிர நிறைந்திருக்க
வாட்டுகின்ற குளிரிடையே
வந்திடுவாள் மாசியவள்!
புலர்கின்ற. கதிரொளியும்
புரட்சியெனப் பனிவிலக்கிப்
புத்தொளியின் மெருகுடனே
பூபாளப் பாட்டிசைக்கும்!
மலர்கின்ற பொழுதுகளாய்
மகிழ்வுடனே தினந்தொடரும்!
ஆதிசிவன் இராத்திரியை
அடியவரும் தொழுதிருப்பர்
காதலதன் மாதமிதாய்க்
களித்திருக்கும் இளமைகளும்!
பூதலத்தில் மாசியுமே
பூரிப்பாய் நடமிடுவாள்!
கீத்தா பரமானந்தன்
29-01-24
காலமகள் கணக்கினிலே