பொங்கட்டும் பொங்கல்!
மங்கலம் பொங்க
மனங்கள் சிரிக்க
எங்கணும் செழுமை
எழிலுடன் தங்க
பங்கயம் என்றே
பாரதும் மிளிரப்
பரவசம் நிறத்தே
பொங்கட்டும் பொங்கல்!
கங்குலும் விலகக்
கதிரதன் அணைப்பில்
தங்கியே விழைச்சல்
தரணியை நிறைக்க
கண்மாய் குளங்கள்
கரையின்றிப் பாய
இல்லத்தில் உள்ளத்தில்
இனிமையைப் பொங்கட்டும்!
அன்பினிற் பிணைந்து
அகிலமும் ஒன்றாய்
சிந்தனை விரித்துச்
சிகரங்கள் தொட்டிட
வெற்றிக் களிப்புடன்
வேட்டுகள் முழங்க
எங்கணும் பொங்கட்டும்
பொங்கலோ பொங்கல்!
கீத்தா பரமானந்தன்15-01-24