வசந்தத்தில் ஓர்நாள்!
தென்றலும் வீசிடும்
தெம்மாங்கு கேட்டிடும்
எங்குமே பசுமை
எழில் விரித்தாடப்
பொங்கியே இன்பம்
பூமியை அணைக்கும்!
சிட்டுக்கள் பாட்டில்
சிரித்திடும் சோலைகள்
பட்டிதழ் விரித்திடும்
பலவித மலர்கள்!
சுற்றியே வண்டுகள்
சுகந்தத்தைக் காவும்!
மொத்தமாய் அழகின்
மோகனம் கண்டே
சித்தத்தில் இன்பம்
சிறகினை விரிக்கும்!
இத்தனை அழகின்
இனிமையைச் சொல்ல
இழைந்தன விரல்கள்
இசைந்தன கவியாய்!
வசந்தத்தில் ஓர்நாள்
வாஞ்சையாய்ச் சுற்றிய
வனப்பான பொழுதின்
இனிப்பான நினைவில்
இனிப்பான வரியுடன்!
கீத்த்கா – பரமானந்தன்09-01-24