கவிதை நேரம்-31.10.2024
கவி இலக்கம்-1940
பண்டிகை வந்தாலே
——————–
பண்டிகை வந்தாலே பெரும் மகிழ்வே
உலகமெலாம் பெரும் கொண்டாட்டமே
பலமான கனவு நினைவு வந்து போகுமே
பல சமயத்தினர் கொண்டாடி மகிழ்வினரே
உழவர்கள் திருநாள் பொங்கல் பண்டிகையே
இந்துக்கள் தீப ஒளி சித்திரை வருடம் மகிழ்வினரே
கிறிஸ்து நத்தார் புது வருடம் உயிர்ப்பு திருநாளே
இஸ்லாம் றம்ழான் கச்சிப் பொருள் தினமே
கடைகள் ஒளி விளக்குகள் பிரகாசமே
மலிவு விற்பனையில் கடைகள் அலங்காரமே
மக்கள் மலிவு தேடியே ஏறி இறங்குதே
புத்தாடை அணிந்து அலங்கரித்து மகிழ்வே
வீடுகளில் பலதான பணிகாரங்கள் உணவே
பட்டாசு கொழுத்தி வாண வேடிக்கை ஒளிருமே
உற்றார் உறவினர் ஒன்று கூடி கொண்டாட்டமே
ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகை சிறப்பே