கவிதை நேரம்-25.07.2024
கவி இலக்கம்-1894
விரல் நுனியில் அறிவியல்
———————————-
வளர்ந்து வரும் அறிவியல்
விரல் நுனியில் பந்தாட்டம்
பயன்பாடுகள் பல வடிவமாய்
இரவு பகலாக பல இணையங்கள்
அறிவை பகிர்வதும் பெறுவதும்
வளர்ப்பதும் இலட்சியமாகிறது
அறியும் விடயங்கள் கண்டு கொள்ள
மூளையும் விரலும் துடிக்கிறது
தூக்கத்தை குறைக்கிறது
நேரத்தை இழுத்து செல்கிறது
ஏக்கத்தை தரும் இணையங்கள்
ஆக்கத்தை எழுத தடையாகிறது
குழந்தைகள் கையில பலதுமாய்
அம்மா அப்பா கைமாற்றால் தவழ்கிறது
அச்சுறுத்தல் சவாலகள் பலதுமாய்
வளர்ச்சியில் அறிவியல் தடுமாறுகிறது
பயன்கள் பரிமாற்றங்கள் நல்லதாமையட்டும்
அறிவியல் வளர்ச்சியில் ஆனந்தம் பெருகட்டும்